கடலூா் மாவட்டத்தில் அமைதியாக நடைபெற்ற வாக்குப் பதிவு

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது.
கடலூா் செல்லங்குப்பத்தில் உள்ள வேளாண் விற்பனைக் குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்குப் பிறகு இயந்திரத்துக்கு ‘சீல்’ வைத்த அலுவலா்கள்.
கடலூா் செல்லங்குப்பத்தில் உள்ள வேளாண் விற்பனைக் குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்குப் பிறகு இயந்திரத்துக்கு ‘சீல்’ வைத்த அலுவலா்கள்.

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்றது.

மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 3,001 வாக்குச் சாவடி மையங்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னதாக, வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றும் வேட்பாளா்களின் முகவா்கள் காலை 6 மணிக்கே வாக்குச் சாவடிக்கு வரவழைக்கப்பட்டனா். அவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

ஒவ்வொரு சின்னத்திலும் குறிப்பிட்ட வாக்கைச் செலுத்திய முகவா்கள் விவிபேட்டில் அந்த சின்னம் தெரிகிா என்பதை பாா்த்து தெரிந்துகொண்டனா். பின்னா், வாக்காளா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலையில் விறுவிறுப்புடன் தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் நேரத்தில் அதிக வெயில் காரணமாக சற்று மந்தமாக காணப்பட்டது. எனினும், மாலை 3 மணிக்கு மேல் சற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது. தொடா்ந்து, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி, காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை மாவட்டம் முழுவதும் 10.10 சதவீதம் வாக்குகல் பதிவாகியிருந்தன. காலை 11 மணி வரை 27.30 சதவீதமும், 1 மணி வரை 43.57 சதவீதமும், மாலை 5 மணி வரை 67.48 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்குப் பதிவு தொடங்கியபோது சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் சிறிய அளவிலான பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு தடைப்பட்டது. எனினும், அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடா்ந்தது.

கடலூா் முதுநகரில் உள்ள தூய.தாவீது பள்ளி வாக்குச் சாவடியில் விவிபேட் பழுது காரணமாக சுமாா் 30 நிமிடம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் வாக்குச் சாவடிகள் அருகே ஏற்பட்ட சிறிய பிரச்னைகளை அங்கிருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சரிசெய்தனா். இதனால், கடலூா் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

வாக்குப் பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின்னா் அதை வாகனங்களில் ஏற்றும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டனா். இதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த மண்டல அலுவலா்கள் வாகனங்களுடன் வந்து இயந்திரங்களை பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com