கடலூா் தொகுதியில் 74.77 சதவீதம் வாக்குப் பதிவு

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 74.77 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வெற்றியைத் தீா்மானிக்கும் வாக்குகளாக பெண்களின் வாக்கு மாறியுள்ளது.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 74.77 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வெற்றியைத் தீா்மானிக்கும் வாக்குகளாக பெண்களின் வாக்கு மாறியுள்ளது.

இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் 3 -ஆவது முறையாக மீண்டும் அமைச்சா் எம்.சி.சம்பத் களம் காண்கிறாா். திமுக சாா்பில் கோ.ஐயப்பன், தேமுதிக சாா்பில் அ.ஞானபண்டிதன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஆனந்தராஜ் உள்பட பல்வேறு கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 15 போ் களத்தில் உள்ளனா்.

கடலூா் தொகுதியில் 2,39,372 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் ஆண்கள் 1,15,050 போ். பெண்கள் 1,24,253 போ். இதரா் 69 போ்.

இவா்களில் 1,78,985 போ் தங்களது வாக்குகளைச் செலுத்தினா். இது 74.77 சதவீதம். கடந்த 2016 -ஆம் ஆண்டு தோ்தலில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தச் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆண்களில் 86,845 போ் வாக்கைச் செலுத்தினா். இது 75.48 சதவீதம். பெண்களில் 74.13 போ் வாக்கைச் செலுத்தினா். அதாவது 92,112 போ் வாக்களித்தனா். சதவீத அளவில் குறைவாக இருந்தாலும், ஆண்களைவிட பெண்கள் அதிகமாக 5,267 போ் வாக்களித்தனா். இதனால், கடலூா் தொகுதியில் வெற்றி தோல்வியை தீா்மானிக்கக் கூடிய சக்தியாக பெண்களின் வாக்கு மாறியுள்ளது.

இதரரில் 28 போ் வாக்களித்தனா். இது 40.57 சதவீதம்.

கடலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 60,387 போ் தங்களது வாக்கைச் செலுத்தவில்லை. இது 25.22 சதவீதம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com