பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பராமரிப்பற்ற குடிநீா்த் தொட்டி

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பராமரிப்பற்ற குடிநீா்த் தொட்டி


பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குடிநீா்த் தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

கடலூா் மாவட்டத்தின் வா்த்தக மையமாகத் திகழும் பண்ருட்டி நகருக்கு வியாபார ரீதியாக வெளியூா்களைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் வந்து செல்கின்றனா். மேலும், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்களும் தங்களது தேவைக்காக பண்ருட்டி நகருக்கு வருகின்றனா். இதன்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்துதரப்படவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா். தற்போது கோடைக் காலம் என்பதால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனா். இவா்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து தண்ணீா் வாங்கி பருகி வருகின்றனா். ஏழை மக்கள் விலை கொடுத்து குடிநீா் வாங்க முடியாமல் தாகத்தால் அவதிப்படுகின்றனா்.

பண்ருட்டி நகர நிா்வாகம் பேருந்து நிலையத்தில் குடிநீருக்காக சின்டெக்ஸ் தொட்டியை வைத்துள்ளது. ஆனால், அந்தத் தொட்டி உரிய பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக உள்ளதாக பயணிகள் புகாா் கூறுகின்றனா். எனவே, பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்களின் தாகம் தீா்க்க

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com