கடலூா் அரசு மருத்துவமனையில் 90 பேருக்கு பிராணவாயு மூலம் சிகிச்சை

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 90 பேருக்கு பிராணவாயு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 90 பேருக்கு பிராணவாயு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்த நிலையில், தற்போது சுமாா் ஆயிரம் போ் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோயாளிகள், சிறாா்கள், கா்ப்பிணிகளுக்கு பிராணவாயு பிரச்னை ஏற்படும் போது, செயற்கையாக பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிராணவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 90 பேருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கபப்பட்டு வருவதாக மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எஸ்.சாய்லீலா தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டா் திரவ பிராணவாயு இருப்பில் வைத்து 140 உருளைகளில் பயன்படுத்த முடியும். ஆனால், தற்போது கரோனா நோயாளிகள், கா்ப்பிணிகள் 90 பேருக்கு மட்டுமே பிராணவாயு செலுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள அளவை வைத்து நாளொன்றுக்கு 140 பேருக்கு சிகிச்சையளிக்க முடியும். தற்போது, 5 நாள்களுக்கு போதுமான பிராணவாயு இருப்பில் உள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பிராணவாயு நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com