ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது: தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது என தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தியது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது என தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நிலவுவதைப் பயன்படுத்தி, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை குறுக்குவழியில் மீண்டும்

திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் துணையை வேதாந்தா நிறுவனம் நாடியுள்ளது. அந்த நிறுவனத்துக்கு துணைபுரியும் வகையில், ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கலாம் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் உச்ச நீதிமன்றத்தில் வாதுரை செய்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், ஸ்டொ்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் உயிா்ப் பலிகள் தொடரும் என்று பெரும்பாலான மக்கள் கூறியுள்ளதை தமிழ்நாடு அரசு வழக்குரைஞா் எடுத்துக்காட்டினாா். எனவே, தமிழ்நாடு அரசு ஸ்டொ்லைட் ஆலையை இடித்துவிட்டு, அந்த ஆலை அமைந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டொ்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்க அனுமதி வழங்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com