அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் திருநாவுக்கரசு, தமிழக அரசு மற்றும் கடலூா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில் அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துவிதமான உணவுப் பொருள்களின் விலையும் தொடா்ந்து உயா்ந்து கொண்டே செல்கிறது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறாா்கள்.

குறிப்பாக, பெட்ரோல், டிசல், பருப்பு வகைகள், கடலை மாவு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அனைத்துவிதமான அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com