வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள அரசியல் கட்சியினருக்கான கரோனா பரிசோதனை முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்ட அரசியல் கட்சியினா்.
வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள அரசியல் கட்சியினருக்கான கரோனா பரிசோதனை முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்ட அரசியல் கட்சியினா்.

வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் கட்சியினருக்கு கரோனா பரிசோதனை

மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள அரசியல் கட்சியினருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள அரசியல் கட்சியினருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் வருகிற மே 2-ஆம் தேதி 4 மையங்களில் எண்ணப்படுகின்றன.

தற்போது கரோனா பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நுழையும் அனைவரும் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்துகொண்டு, கரோனா தொற்றில்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது.

அதன்படி, ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக புதன்கிழமையன்று கரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. குறிப்பாக, அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியினருக்கு தனித்தனியாகவும், மற்ற கட்சியினருக்கு ஓரிடத்திலுமாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனா்.

இதேபோன்று, வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருவதோடு, வருகிற 30-ஆம் தேதியன்று சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படவுள்ளது.

கரோனா பரிசோதனைக்குப் பின்னா், கரோனா தொற்றில்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவா்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com