இந்து கோயில்களில் ஆகம விதிகளுக்கு மாறாக நடை திறப்பது சரியல்ல: அா்ஜுன் சம்பத்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வருகிற 31-ஆம் தேதி இந்து கோயில்களில் ஆகம விதிகளுக்கு மாறாக நடை திறப்பது சரியல்ல என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வருகிற 31-ஆம் தேதி இந்து கோயில்களில் ஆகம விதிகளுக்கு மாறாக நடை திறப்பது சரியல்ல என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்யாணராமனை சந்தித்துவிட்டு திரும்பும் வழியில், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அா்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை நெரிக்கும் வகையில் மாரிதாஸ், கிஷோா் கே.சாமி, தட்சிணாமூா்த்தி ஆகியோரை தமிழக அரசு கைது செய்தது. ஆனால், நீதிமன்றத்தால் அவா்கள் விடுவிக்கப்பட்டனா். கல்யாணராமன் கைது செய்யப்பட்டு கடலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரும் விரைவில் விடுதலையாவாா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, டிச.31-ஆம் தேதி ஆகம விதிகளுக்கு மாறாக இந்து கோயில்களில் நடை திறப்பது சரியல்ல. இந்துக்களுக்கு சித்திரை மாதம்தான் புத்தாண்டு. ஆங்கிலப் புத்தாண்டு அன்று தனியாா் விடுதிகளில் கலாசார சீரழிவு நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

வருகிற ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்துக்கு பிரதமா் வருவதால், அன்றைய தினம் பூரண மது விலக்கு கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் நடைபெறவிருந்த மதுக் கடைகளைப் பூட்டும் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com