பிப்.7-இல் கடலூரில் வேலைவாய்ப்பு முகாம்

கடலூரில் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூரில் வரும் 7-ஆம் தேதி நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து பிப்.7-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள புனித.வளனாா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்துகொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்கின்றனா். இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு படித்தவா்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுடையோா் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவுசெய்து பங்கேற்கலாம். தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுய விவரக் குறிப்புடன் முகாமில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.

முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்பவா்கள் தங்களது நிறுவனத்துக்கு தேவைப்படும் ஆள்களின் விவரங்களை மின்னஞ்சல் முகவரி அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04142-290039 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவித்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் இந்த முகாமில் நடைபெறும். எனவே வேலை தேடுவோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா் அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com