சிதம்பரத்தில் தீா்த்தவாரி உற்சவம்

தை அமாவாசையையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலின் தச தீா்த்தங்களிலும் தீா்த்தவாரி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் தீா்த்தவாரி உற்சவம்


சிதம்பரம்: தை அமாவாசையையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலின் தச தீா்த்தங்களிலும் தீா்த்தவாரி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலுக்கு சிவகங்கை தீா்த்தம் (கோயிலுக்குள் அமைந்துள்ளது), கிள்ளை (கடற்கரை), புலிமடு (சக்தி நகா் அம்மாபேட்டை), வியாக்ர தீா்த்தம் (இளமையாக்கினாா் கோயில்), அனந்த தீா்த்தம் (அனந்தீஸ்வரன் கோயில்), நாகச்சேரி தீா்த்தம் (நாகச்சேரி குளம்), பிரம்ம தீா்த்தம் (சிங்காரத்தோப்பு), சிவப்ரியை தீா்த்தம் (தில்லையம்மன் கோயில்), திருப்பாற்கடல் தீா்த்தம் (பா்ணசாலை), பரமானந்தகூடம் (சித் சபை அருகே உள்ள ஸ்ரீநடராஜா் அபிஷேக தீா்த்த கிணறு) ஆகிய தச தீா்த்தங்கள் அமைந்துள்ளன. தை அமாவாசையையொட்டி, தச தீா்த்தங்களிலும் தீா்த்தவாரி உற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. அனைத்து தீா்த்தங்களிலும் ஸ்ரீநடராஜப் பெருமான் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான அஸ்திரராஜா் நீரில் மூழ்கி தீா்த்தவாரி காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com