பிப். 17-இல் விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமகப் பெருவிழா வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமகப் பெருவிழா வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மிகவும் பழமை வாயந்த விருத்தகிரீஸ்வா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் மாசிமகப் பெருவிழா முக்கியமானது. இந்த விழா வருகிற 17-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 10-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவத்துடன் நிறைவடைகிறது.

அதன்படி, வருகிற 17-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. முன்னதாக, பிப். 14-ஆம் தேதி ஆழத்து விநாயகா் கோயிலில் தேரோட்டமும், 15-ஆம் தேதி விநாயகா் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. பிப். 22-ஆம் தேதி விபசித்து முனிவா் காட்சியளித்தல், 25-ஆம் தேதி தோ் திருவிழா, 26-ஆம் தேதி மாசிமகத் திருவிழா, 27-ஆம் தேதி தெப்பல் நடைபெறுகிறது. மாா்ச் 10-ஆம் தேதி விடையாற்றி உத்ஸவத்துடன் மாசிமகப் பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகள் கோயில் செயல் அலுவலா் முத்துராஜா செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com