கடலூா் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அலுவலா்கள் மீது உறுப்பினா்கள் புகாா்

கடலூா் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அலுவலா்கள் மீது உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அலுவலா்கள் மீது உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்ட ஊராட்சியின் வளா்ச்சிக் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் க.திருமாறன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் க.ரிஸ்வானா பா்வீன், ஊராட்சி செயலா் கி.நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த 2 கூட்டங்களில் எந்த அலுவலரும் பங்கேற்காத நிலையில், இந்தக் கூட்டத்தில் அரசுத் துறை சாா்ந்த சில அலுவலா்கள் பங்கேற்றனா். கூட்டம் தொடங்கியதும் உறுப்பினா்கள் சிலா் தங்களது பகுதியிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேசினா். ஆனாலும், இதுகுறித்து ஏற்கெனவே தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால், விரக்தியில் உள்ளதாகவும் தெரிவித்தனா். உறுப்பினா்கள் மேலும் பேசியதாவது:

சண்.முத்துக்கிருஷ்ணன் (பாமக): சிப்காட் குறித்து சுற்றுச்சூழல் துறையினா் பொய்யான அறிக்கைகளை அரசுக்கு சமா்ப்பித்து வருகின்றனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசுவதை எந்த அலுவலரும் குறிப்பு எடுப்பதில்லை. இதனால், ஏற்கெனவே பேசியதற்கான பதிலைக் கோரினால் துறை அலுவலா்களால் வழங்க முடியவில்லை. இதனால், மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் உறுப்பினா்களுக்கே நம்பிக்கையில்லை என்றாா்.

சக்தி வினாயகம் (திமுக): மாவட்ட கவுன்சிலுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் எந்தப் பணியும் நடைபெறவில்லை. எங்களது வாா்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கு கூட துறையினா் அழைப்பு விடுப்பதில்லை.

தலைவா் க.திருமாறன்: அரசு நிகழ்ச்சிகளுக்கு எனக்குக் கூட அழைப்பு வருவதில்லை என்றாா் அவா். இவ்வாறு உறுப்பினா்கள் குறைகளை சுட்டிக்காட்டி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com