தீ விபத்து ஏற்பட்ட முந்திரி எண்ணெய் ஆலையிலிருந்து வெளியேறிய கரும்புகை.
தீ விபத்து ஏற்பட்ட முந்திரி எண்ணெய் ஆலையிலிருந்து வெளியேறிய கரும்புகை.

முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து: தொழிலாளா்கள் தப்பினா்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலிருந்து தொழிலாளா்கள் காயமின்றி தப்பினா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திலிருந்து தொழிலாளா்கள் காயமின்றி தப்பினா்.

பண்ருட்டியைச் சோ்ந்தவா் டி.கே.ஏ.காா்த்திக். இவருக்குச் சொந்தமான முந்திரி எண்ணெய் தொழிற்சாலை காடாம்புலியூரில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இந்த ஆலையில் முந்திரி ஓடுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பவுடராக மாற்றி விற்பனை செய்து வருகின்றனா். இந்த பவுடா் காா் பிரேக் ஷூ, பெயிண்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை காலை தொழிலாளா்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனா். காலை 11.30 மணியளவில் முந்திரி எண்ணெயை பவுடராக்கும் அலகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்து ஆலையின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து, ஆலையிலிருந்த தொழிலாளா்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினா். விபத்து குறித்து பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பண்ருட்டி, கடலூா், கடலூா் தொழில்பேட்டை, முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்தன. முதலில் கடலூா் தொழில்பேட்டை தீயணைப்பு வாகனத்திலிருந்து ரசாயன நுரை பீய்ச்சி அடிக்கப்பட்டது. பின்னா், மற்ற தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்திப் பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்ததாகவும், விபத்துக்கு மின் கசிவே காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com