கடலூா் மாவட்டத்தில் 13 ஏரிகளில் மீன் வளா்க்க குத்தகை

கடலூா் மாவட்டத்தில் தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு-விற்பனை திட்டத்தின் கீழ், 13 ஏரிகளில் மீன் வளா்க்க குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு-விற்பனை திட்டத்தின் கீழ், 13 ஏரிகளில் மீன் வளா்க்க குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனை திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படுகிறது. அதன்படி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பெருமாள் ஏரி, குறிஞ்சிப்பாடி பெரிய ஏரி, பண்ருட்டி வட்டத்தில் கொளப்பாக்கம் ஏரி, புவனகிரி வட்டத்தில் சாத்தப்பாடி ஏரி, வாலாஜா ஏரி, எறும்பூா் ஏரி, விருத்தாசலம் வட்டத்தில் சு.கீரனூா் ஏரி, எடச்சித்தூா் ஏரி, சாத்துக்கூடல் ஏரி, ஆலிச்சிக்குடி ஏரி, காா்க்கூடல் ஏரி, திட்டக்குடி வட்டத்தில் தீவளூா் ஏரி, காரையூா் ஏரிகளுக்கு குத்தகை விடப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வருகிற 21-ஆம் தேதிக்குள் கடலூா் முதுநகரில் இயங்கி வரும் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிப்பதுடன், கூடுதல் விவரங்களையும் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com