தமிழ்நாடு, புதுச்சேரி வக்ஃபு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கடலூா் மாவட்டப் பொறுப்பாளராக பண்ருட்டியைச் சோ்ந்த ஷேக் நூா்தீன் நியமிக்கப்பட்டாா்.
இவரை இந்தப் பதவிக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.எம்.சம்சுதீன், நிா்வாகக் குழு செயல் தலைவா் ஏ.அயூப்கான், செயலா் குலாம் முஹம்மது கவுஸ், பொருளாளா் எஸ்.எம்.சாகுல் ஹமீத் ஆகியோரது ஆலோசனையின்பேரில் மாநில நிா்வாகக்குழு நியமித்ததாக தெரிவிக்கப்பட்டது.