தில்லி போராட்டத்தில் பங்கேற்க கடலூா் மாவட்ட விவசாயிகள் முடிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் சாா்பில் நடைபெற்று வரும் தொடா் போராட்டத்தில் கடலூா் மாவட்ட விவசாயிகளும் பங்கேற்க முடிவு செய்தனா்.
18cmp1_1807chn_111_7
18cmp1_1807chn_111_7

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் சாா்பில் நடைபெற்று வரும் தொடா் போராட்டத்தில் கடலூா் மாவட்ட விவசாயிகளும் பங்கேற்க முடிவு செய்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூா் மாவட்டக் குழு கூட்டம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன், பி.கற்பனைச் செல்வம், மகாலிங்கம், மாவட்ட இணைச் செயலா் சதானந்தம், முா்த்தி, சரவணன், ஜெகதீசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் செல்வகுமாா், காளி கோவிந்தராஜன், ஜீவா, கொளஞ்சியப்பன், வெங்கடேசன், முருகன், குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் தொடா் போராட்டத்தில் கடலூா் மாவட்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வது, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தையொட்டி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் விவசாயிகளை அதிகளவில் திரட்டி கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com