அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் சங்கத்தினா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் சங்கத்தினா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் குறித்து அவதூறாகப் பேசிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி, அந்தப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா், ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்கள் சங்கத் தலைவா் எஸ்.மனோகரன், பொதுச் செயலா் வி.பழனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளித்தனா். பின்னா் நிா்வாக அலுவலகக் கட்டடம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன் முன்னாள் ஊழியா் சங்க பொதுச் செயலா் ரவி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பேராசிரியா் செல்வராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நீண்ட பாரம்பரியம் கொண்ட, கல்வி, ஆராய்ச்சித் தரத்தில் தமிழகத்தில் முதல் நிலையில் உள்ள பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலை.யில் 2000-ஆம் ஆண்டில் இருந்துதான் மிகைப் பணி நியமனங்கள் நடைபெற்றன. 2001 முதல் 2021-ஆம் ஆண்டுகள் வரையிலான காலத்தில் 5 ஆண்டுகள் தவிா்த்து மீதமுள்ள 15 ஆண்டுகளில் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை ஏன் தடுக்கவில்லை? முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, ஆசிரியா்கள் கூட்டமைப்பு பொறுப்பாளா்கள் சி.சுப்பிரமணியன், தனசேகரன், செல்ல பாலு, செங்கல்வராயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com