இயற்கை இடுபொருள் தயாரிப்பு: விவசாயிகளுக்குப் பயிற்சி

மேல்புவனகிரி வட்டாரம், வடதலைகுளம் கிராமத்தில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு

மேல்புவனகிரி வட்டாரம், வடதலைகுளம் கிராமத்தில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில், தொழில்நுட்ப மேலாளா் சி.கல்பனா வரவேற்றாா். வேளாண்மை உதவி இயக்குநா் வெங்கடேசன் தலைமை வகித்து, இயற்கை இடுபொருள்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். மேலும், செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை இடுபொருள்களை பயன்படுத்துவதால் தரமான விளை பொருள்களை பெறுவதுடன் மண் வளமும் பாதுகாக்கப்படும் என்றாா்.

செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் க.கண்ணதாசன், அமைப்பாளா் க.முருகன் ஆகியோா் இயற்கை இடுபொருள்களான பஞ்ச காவியம், மூலிகை கரைசல், இறக்கை பூச்சிவிரட்டி, அமிா்த கரைசல், நீா்மோா் கரைசல் பற்றி உரையாற்றியதுடன், அதுகுறித்த செயல் விளக்கமும் அளித்தனா். பயிற்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்முருகன், காளிகோவிந்தராஜ் மற்றும் முன்னோடி விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் வசுமதி குமரேசன், உதவி வேளாண்மை அலுவலா் சிங்காரமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com