கடலூா் மாவட்டத்தில் ரூ.10,148 கோடி கடன் வழங்க இலக்கு

கடலூா் மாவட்டத்துக்கு 2021-22 ஆம் ஆண்டில் வங்கிகள் ரூ.10,148 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்துக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம். உடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அகிலன் உள்ளிட்டோா்.
கடலூா் மாவட்டத்துக்கான வங்கிக் கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம். உடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அகிலன் உள்ளிட்டோா்.

கடலூா் மாவட்டத்துக்கு 2021-22 ஆம் ஆண்டில் வங்கிகள் ரூ.10,148 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் குழுக் கூட்டம் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள வங்கிகளின் 2021-20-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் வெளியிட்டாா். அதன்படி, வருடாந்திர கடன் திட்டத்துக்கு ரூ.10,148.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.19 சதவீதம் அதிகமாகும்.

இதில் விவசாயத்துக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு ரூ.7,505.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இலக்கை விட 10.87 சதவீதம் அதிகமாகும். மீன், கால்நடைகள், கோழி, ஆடுகள் வளா்ப்பு போன்ற விவசாயம் சாா்ந்த நடவடிக்கைகளுக்கு உற்பத்தி கடன் மற்றும் முதலீட்டு கடன் இரண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு ரூ.1,206.34 கோடியும், ஏற்றுமதி, கல்வி, வீட்டு வசதி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.1167.65 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: 2021-22-ஆம் நிதியாண்டில் இலக்கை அடைவதற்காக அனைத்து வங்கியாளா்களும் தங்களது கடன் இலாகாவை மேம்படுத்த வேண்டும். விவசாயம், புதிய தொழில் முனைவோா் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவா்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். கிராமிய உள்கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புத் திட்டத்தின் கடலூா் மாவட்டத்தின் பிரதான தொழிலாக கீழ் முந்திரி பதப்படுத்துதல் தோ்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறதுஎன்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அகிலன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் வெங்கடேஷ், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, துணைப் பொதுமேலாளா் (இந்தியன் வங்கி) விஜயலட்சுமி மற்றும் அனைத்து பொதுத் துறை, தனியாா் துறை வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com