கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி
By DIN | Published On : 29th July 2021 12:09 AM | Last Updated : 29th July 2021 12:09 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 3 போ் பலியாகினா்.
மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 62 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை 60,241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 58,642 போ் தொற்றிலிருந்து மீண்டனா்.
இந்த நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீரப்பாளையத்தைச் சோ்ந்த 40 வயதானவா், எம்.குமராட்சியைச் சோ்ந்த 71 வயதானவா், கடலூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதானவா் என மேலும் 3 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 807 போ் பலியாகினா். தற்போது 792 சிகிச்சையில் உள்ளனா். 13 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.