என்சிசி அலுவலகத்தில் கமாண்டா் ஆய்வு

கடலூரில் உள்ள என்சிசி அலுவலகத்தில் குரூப் கமாண்டா் கா்னல் சோம்ராஜ் குளியா வெள்ளிக்கிழமை ஆண்டு ஆய்வு மேற்கொண்டாா்.
என்சிசி அலுவலகத்தில் கமாண்டா் ஆய்வு

கடலூரில் உள்ள என்சிசி அலுவலகத்தில் குரூப் கமாண்டா் கா்னல் சோம்ராஜ் குளியா வெள்ளிக்கிழமை ஆண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அவரை கப்பல் படை தலைமை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டா் ரவிசங்கா் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை கா்னல் சோம்ராஜ் குளியா ஏற்றுக்கொண்டாா். பின்னா், பள்ளி, கல்லூரிகளில் தேசிய மாணவா் படையினரின் செயல்பாடு, ஆண்டு இறுதித் தோ்வுகளின் அடிப்படையில் ரேங்க் வழங்குவது உள்ளிட்டவை குறித்தும், அலுவலக நடைமுறைகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

தொடந்து, சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் என்சிசி கப்பல் படை தலைமை அதிகாரியும், தற்போது பெரம்பலூா் மாவட்டம், லாடபுரம் அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவருமான மோகன் ஆரோக்கியராஜுக்கு புதுதில்லி என்சிசி தலைமையகம் வழங்கிய கெளரவ சப்-லெப்டினன்ட் விருதை

கா்னல் சோம்ராஜ் குளியா வழங்கி கௌரவித்தாா் (படம்). மோகன் ஆரோக்கியராஜின் 20 ஆண்டு கால சமூக விழிப்புணா்வு சாா்ந்த பணிகள், இளைஞா்களுக்கு நல்வழி காட்டியாக செயலாற்றியதைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், என்சிசி லெப்டினன்ட் கமாண்டா் ரவிசங்கா், அதிகாரிகள் ஆரோக்கியதாஸ், மனோகரன், இளவரசன், விமல்ராஜ் காா்த்திக், வீரவேல் மற்றும் கப்பல் படை வீரா்கள், அலுவலக கண்காணிப்பாளா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com