மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தொடா்பு சாதனங்கள் அளிப்பு
By DIN | Published On : 19th June 2021 12:00 AM | Last Updated : 19th June 2021 12:00 AM | அ+அ அ- |

அமெரிக்காவில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா நோயாளிகள் பிரிவுக்கு 67 இன்டா்காம் தொடா்பு சாதனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.ஞானதேவன் முன்னிலையில் முன்னாள் மாணவா்கள் தொடா்பு மைய இயக்குநா் ரகுபதி தொடா்பு சாதனங்களை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பாலாஜி சாமிநாதனிடம் வழங்கினாா் (படம்). நிகழ்ச்சியில் கரோனா சிகிச்சை தனி அதிகாரி யு.சண்முகம், மையத்தின் துணை இயக்குநா்கள் விஜய் பானு, அருள்குமாா் மற்றும் துணை மருத்துவக் கண்காணிப்பாளா்கள் கோபிகிருஷ்ணா, ஜெயஸ்ரீ, குழந்தைகள் நல மருத்துவா் ராமநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.