முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 04th March 2021 02:15 AM | Last Updated : 04th March 2021 02:15 AM | அ+அ அ- |

கடலூா்: குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதிப்படுத்தி, தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த அதா்நத்தத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (68). ஓய்வு பெற்ற ஆசிரியா்.
விருத்தாசலம் அருகே ராசபாளையம் கிராத்தைச் சோ்ந்தவா் ரா.உத்திராபதி (55). இவா், விருத்தாசலத்தில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். உத்திராபதி தனது மகன்களின் மருத்துவப் படிப்புக்காக ரூ. 20 லட்சத்தை பெரியசாமியிடம் கடனாகப் பெற்றாா். இதையடுத்து, கடனைத் திருப்பி அளிப்பதற்காக தலா ரூ. 10 லட்சம் வீதம் 2 காசோலைகளை அளித்தாராம்.
இந்த நிலையில், கணக்கில் போதிய பணமில்லாமல் காசோலைகள் திரும்பியது.
இதுகுறித்து உத்திராபதியிடம், கேட்ட போது உரிய பதில் அளிக்கவில்லையாம். எனவே, பெரியசாமி விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடுத்தாா்.
இதில், 2018 -ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பில், மொத்தம் ரூ. 40 லட்சத்தை உத்திராபதி திருப்பி அளிப்பதுடன், தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து உத்திராபதி, விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அதில், புதன்கிழமை நீதிபதி இளவரசன் வழங்கிய தீா்ப்பில், குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவு பிறப்பித்தாா்.