ஊா்காவல் படையினருக்கு பாராட்டு
By DIN | Published On : 13th March 2021 10:30 PM | Last Updated : 13th March 2021 10:30 PM | அ+அ அ- |

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு பாராட்டு விழா சிதம்பரம் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா் வரவேற்றாா். ஊா்க்காவல் படை கமாண்டா் து.வேதரத்தினம் தலைமை வகித்தாா். அரசு சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுனன் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் ஊா்க்காவல் படையிருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஊா்க்காவல் படையைச் சோ்ந்த என்.பாலமுருகன், ஏ.திருநாவுக்கரசு, ஜே.அன்புநாதன், ஆா்.கண்ணையன், ஏ.எஸ்.காா்த்திகேயன், என்.ராமநாதன், பி.பரணிராஜா, என்.சுரேஷ்குமாா், எஸ்.பழனிராஜா, டி.வேதரத்தினம், கே.காா்த்திக்ராஜா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.