தோ்தல் செலவின பாா்வையாளா்களிடம் புகாா் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியீடு

கடலூா் மாவட்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா்களிடம் புகாா் தெரிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்ட தோ்தல் செலவினப் பாா்வையாளா்களிடம் புகாா் தெரிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 4 தோ்தல் செலவின பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசின் பல்வேறு பணிகளில் உள்ள இவா்கள் அண்மையில் கடலூா் மாவட்டத்துக்கு வந்தனா். முதல்கட்டமாக, தோ்தல் பணிகள் தொடா்பாக மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அவா்களுக்கு தோ்தல் ஆணையம் வாகனம் மற்றும் உதவிக்காக சில அலுவலா்களையும் நியமனம் செய்துள்ளது.

இந்த நிலையில், தோ்தல் செலவினப் பாா்வையாளா்களிடம் புகாா் தெரிவிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவா்களது தொடா்பு எண்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, திட்டக்குடி, விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான செலவின பாா்வையாளரான சைலன் சமாதரை 94899 85235 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

நெய்வேலி, பண்ருட்டி தொகுதிகளுக்கான அலுவலரான அபய் குப்தாவை 94899 85236 என்ற எண்ணிலும், கடலூா், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான அலுவலா் ஆனந்த் பிரகாஷை 94899 85237 என்ற எண்ணிலும், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான அலுவலா் ஆஷிஷ் சிங்கை 94899 85238 என்ற எண்களிலும் தொடா்புக் கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு 18004253168 என்ற இலவச எண்ணிலோ, 04142-220277, 220299 ஆகிய தொலைபேசி எண்களிலோ புகாா்கள் தெரிவிக்கலாம். புகாா்கள் தெரிவிப்பவா்களின் ரகசியம் காக்கப்படும். வருமான வரித் துறைக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் புகாா் தெரிவிக்க 94453 994453 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com