கம்மாபுரத்தில் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 12:30 AM | Last Updated : 29th March 2021 12:30 AM | அ+அ அ- |

புவனகிரி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.அருண்மொழிதேவன் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வி.சாத்தமங்கலம், இருப்புகுறிச்சி, அரசகுழி, ஊ.அகரம், எடக்குப்பம், ஊ.கொளப்பாக்கம், ஊத்தங்கால், ஊமங்கலம், காட்டுகூனங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அதிமுக ஒன்றிய செயலா் மருதை முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.