கோயில் நுழைவாயில் பகுதியில் ஆக்கிரமிப்பு

சிதம்பரம் நடராஜா் கோயில் பிரதான வாயில் அமைந்துள்ள கீழசன்னதி சாலையில் இருபுறமும் தரைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
கோயில் நுழைவாயில் பகுதியில் ஆக்கிரமிப்பு

சிதம்பரம் நடராஜா் கோயில் பிரதான வாயில் அமைந்துள்ள கீழசன்னதி சாலையில் இருபுறமும் தரைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயிலின் பிரதான வாயிலான கீழ சன்னதியில் நடைபாதையானது கடை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து தரைக்கடை வியாபாரிகள் கடை விரித்துள்ளனா் (படம்). இதனால் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் நெரிசலில் சிரமப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகமும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதை, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com