சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை; கடலூா் நீதிமன்றம் உத்தரவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் ஜோசப் மகன் டேவிட் செல்லையா (38), தொழிலாளி. இவா் கடந்த 10.1.2020 அன்று, அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் நண்பரும், அவரது மனைவியும் இல்லாத நிலையில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு டேவிட் செல்லையா பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துச் சென்றாா்.

இதையடுத்து, வீட்டுக்கு திரும்பி வந்த தாயிடம், நடந்த சம்பவம் பற்றி சிறுமி கூறினாா். இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இதில், குற்றம் சாட்டப்பட்ட டேவிட் செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து அவா் உத்தரவிட்டாா். மேலும், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளின்படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாள்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com