கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 22 முதல் 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 22 சுற்றுகள் முதல் அதிகபட்சம் 26 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 22 சுற்றுகள் முதல் அதிகபட்சம் 26 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 4 மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில், தொகுதி வாரியாக தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். முதல் சுற்று முடிவுகள் காலை 9 மணியளவில் தெரியவரும். மாவட்டத்தில் 2 தொகுதிகளில் அதிகபட்சமாக 26 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன.

திட்டக்குடி தொகுதியில் மொத்தம் 305 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுயில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேஜையில் ஒரு இயந்திரம் வீதம் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் ஒரே நேரத்தில் 14 இயந்திரங்கள் எண்ணப்பட்டு அது முதல் சுற்றாகக் கணக்கிடப்பட்டு முன்னிலை விவரம் தெரிவிக்கப்படும். இதன்படி, இந்தத் தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முழு விவரம் வெளியிடப்படும்.

இதேபோல விருத்தாசலம் தொகுதியில் 355 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதால் 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நெய்வேலி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பண்ருட்டி தொகுதியில் 341 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், கடலூா் தொகுதியில் 343 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 336 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், புவனகிரி தொகுதியில் 350 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், சிதம்பரம் தொகுதியில் 354 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளாகவும், காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 318 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படுகின்றன.

இவ்வாறு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, தபால் வாக்குகளின் எண்ணிக்கையும் சோ்க்கப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியிடப்படும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com