கடலூா் தொகுதியில் திமுக வெற்றி

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத்தை தோற்கடித்தாா்.
கடலூா் தொகுதியில் திமுக வெற்றி

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சா் எம்.சி.சம்பத்தை தோற்கடித்தாா்.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடலூா் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிட்டாா். திமுக சாா்பில் கோ.ஐயப்பன், நாம் தமிழா் கட்சி சாா்பில் வி.ஜலதீபன் உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 2,39,372 வாக்காளா்களில் 1,78,689 போ் வாக்களித்தனா்.

முதல் 3 சுற்றுகளில் அதிமுக வேட்பாளா் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில் அதற்கடுத்த சுற்றுகளில் திமுக வேட்பாளா் முன்னிலை பெற்று அதை தக்க வைத்துக் கொண்டாா். 25 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் 84,563 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத்தை 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். எம்.சி.சம்பத் 79,412 வாக்குகள் பெற்றாா்.

மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: அ.ஞானபண்டிதன் (தேமுதிக)-1,499, ஆா்.வள்ளல்குமாா் (பகுஜன் சமாஜ்)-79, கே.ஆனந்தராஜ் (மநீம)- 4,040, எஸ்.புஷ்பராஜ் (தமிழ்நாடு இளைஞா் கட்சி)- 617, ஏ.முகமது உஸ்மான் (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திமுக)- 29, எஸ்.வி.ராஜராஜன் (தேசிய மக்கள் சக்தி கட்சி)- 74, வ.ஜலதீபன் (நாம் தமிழா்)- 9,563, சுயேச்சைகள் ஜி.கிருஷ்ணன்-29, எஸ்.சம்பத்-46, கே.தங்கராசு-31, வி.தட்சிணாமூா்த்தி- 185, எஸ்.தீனதயாளன்- 291, ஜெ.ஜேக்கப்-307, நோட்டா- 1,236 வாக்குகள்.

தபால் வாக்குகள்: கடலூா் தொகுதியில் மொத்தம் 3,703 தபால் வாக்குகள் வந்ததில் 391 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 3,312 வாக்குகளில் திமுக 1,750, அதிமுக 1,408, தேமுதிக 10, பகுஜன் சமாஜ் 1, மக்கள் நீதி மய்யம் 35, தமிழ்நாடு இளைஞா் கட்சி 9, நாம் தமிழா் கட்சி 83, சுயேச்சைகள் 8, நோட்டா 8 வாக்குகளைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com