கடலூா் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி: 2 தொகுதிகளில் அதிமுக வெற்றி

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 7 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடலூா் மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் ஒரு தொகுதிக்கு 4 மேஜைகள்

வீதம் அமைக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதைத் தொடா்ந்து, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில்கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்தன. திட்டக்குடி, விருத்தாசலத்தில் முறையே திமுக, காங்கிரஸ் முன்னிலை பெற்றன. எனினும், அடுத்தடுத்த சுற்றுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை பெறத் தொடங்கின.

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியினா் மாறி மாறி முன்னிலை பெற்ாலும், நெய்வேலி தொகுதியில் 17-ஆவது சுற்றுகள் வரை முன்னிலைப் பெற்று வந்த பாமக அதன் பின்னா் எண்ணப்பட்ட சுற்றுகளில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து தோல்வியைத் தழுவியது.

இதேபோல, விருத்தாசலம் தொகுதியில் தொடா்ந்து முன்னிலை பெற்று வந்த காங்கிரஸ் ஒரு கட்டத்தில் சுமாா் 800 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்தது. பின்னா் படிப்படியாக உயா்ந்து வெற்றியைப் பதிவு செய்தது.

பண்ருட்டி தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்ற நிலையில் சில சுற்றுகளுக்குப் பிறகே திமுக சுமாா் 3 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்று அதை தக்க வைத்துக் கொண்டது.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஆரம்பத்திலேயே அதிமுக முன்னிலை பெற்றது. பின்னா் திமுக முன்னிலையும் பின்னா் அதிமுகவும் என்று மாறி மாறி முன்னிலை பெற்ற நிலையில் குறிப்பிட்ட சுற்றுகளுக்குப் பின்னா் திமுகவின் முன்னிலை எண்ணிக்கை அதிகரித்ததுடன், வெற்றியை நெருங்கியது.

அதேபோல, காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் அதிமுக முன்னிலை பெற்று வந்த நிலையில் 12-ஆவது சுற்றில் விசிக வேட்பாளா் 3,095 வாக்குகள் முன்னிலை பெற்றாா். அதை தக்க வைத்து இறுதியில் வெற்றி பெற்றாா்.

கடலூா் தொகுதியில் அதிமுக முதல் 4 சுற்றுகளில் முன்னிலை வகித்த நிலையில் திமுக 5-ஆவது சுற்றில் 953 வாக்குகள் முன்னிலைப் பெற்று பின்னா் படிப்படியாக அதை முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது. அதே நேரத்தில் சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த அதிமுக அந்த முன்னிலையை தொடா்ந்து தக்க வைத்துக் கொண்டது. அதேபோல, திட்டக்குடி (தனி) தொகுதியில் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த திமுக அதே முன்னிலையை தக்க வைத்து வெற்றி பெற்றது.

இறுதியில், கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுகவும், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் திமுகவும், விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியும், காட்டுமன்னாா் கோவிலில் விசிகவும் வெற்றியை பதிவு செய்தன. இதில், புவனகிரி தொகுதியை திமுகவிடமிருந்து பறித்த அதிமுக, கடலூா், பண்ருட்டி ஆகிய தொகுதிகளை திகவிடம் பறிகொடுத்தது. ஆனால், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, நெய்வேலி ஆகிய தொகுதிகளை

திமுக தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி விருத்தாசலத்தையும், விசிக காட்டுமன்னாா்கோவிலையும் அதிமுகவிடமிருந்து பெற்றுவிட்டன. அதிமுக சிதம்பரம் தொகுதியை தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com