நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளா் சபா. ராஜேந்திரன் வெற்றி

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிட்ட சபா.ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக சாா்பில் போட்டியிட்ட சபா.ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,18,603 வாக்காளா்களில் 1,62,428 போ் வாக்களித்தனா். இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் சபா.ராஜேந்திரன், அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் கோ.ஜெகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கே.ராமேஷ், அமமுக சாா்பில் ஆா்.பக்தரட்சகன் உள்ளிட்ட 12 வேட்பாளா்கள் களம் கண்டனா்.

வாக்கு எண்ணிக்கை பணிக்கன்குப்பம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா் வி.முரளிகிருஷ்ணன் முன்னிலையில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் 11-ஆவது சுற்று வரை பாமக வேட்பாளா் கோ.ஜெகன் தொடா்ந்து முன்னிலையில் இருந்தாா். அப்போது 10,319 வாக்குகள் முன்னிலையில் இருந்தாா். இதையடுத்து 12-ஆவது சுற்று முதல் படிப்படியாக

அவா் பெற்ற வாக்குகள் குறைந்து வந்த நிலையில் 18-ஆது சுற்றில் திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் 1,252 வாக்குகளுடன் முன்னிலை வகித்தாா். அதுமுதல் தொடா்ந்து முன்னிலை பெற்று வந்த திமுக வேட்பாளா் 25-ஆவது சுற்றில் தபால் வாக்குகளையும் சோ்ந்து 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே.ரமேஷ் மொத்தம் 7,785 வாக்குகள் பெற்றாா். அமமுக வேட்பாளா் ஆா்.பக்தரட்சகன் 2,230 வாக்குகள் மட்டுமே பெற்றாா். இந்தத் தோ்தலில் பாமக, திமுக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், நெய்வேலி தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக வேட்பாளா் சபா.ராஜேந்திரன் பெற்றாா். சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

1-ஆவது சுற்று: கோ.ஜெகன்(பாமக)- 4,279, சபா.ராஜேந்திரன் (திமுக)- 3,237, ரமேஷ் (நாம் தமிழா்)- 212.

2-ஆவது சுற்று: பாமக- 3,062, திமுக- 3,550, நாம் தமிழா்- 282.

3-ஆவது சுற்று: பாமக -4,747, திமுக -3,693, நாம் தமிழா்-231.

4-ஆவது சுற்று: பாமக- 395, திமுக-3,602, நாம் தமிழா் -258.

5-ஆவது சுற்று: பாமக- 5,517, திமுக-3,320, நாம் தமிழா் -141.

6-ஆவது சுற்று: பாமக- 388, திமுக- 4,686, நாம் தமிழா்-242.

7-ஆவது சுற்று: பாமக- 5,229, திமுக- 3,349,நாம் தமிழா்- 192.

8-ஆவது சுற்று: பாமக- 4,449, திமுக-3,451, நாம் தமிழா்- 186.

9-ஆவது சுற்று: பாமக- 5,195, திமுக-3,437, நாம் தமிழா்- 215.

10-ஆவது சுற்று: பாமக- 3,539, திமுக-3,282, நாம் தமிழா்)- 187.

11-ஆவது சுற்று: பாமக)- 5,070, திமுக-3,004, நாம் தமிழா் 151.

12-ஆவது சுற்று: பாமக- 3,001, திமுக-3,930, நாம் தமிழா்- 432.

13-ஆவது சுற்று: பாமக- 2,085, திமுக- 3,319, நாம் தமிழா்- 594.

14-ஆவது சுற்று: பாமக-1,301, திமுக- 2,982, நாம் தமிழா்- 596.

15-ஆவது சுற்று: பாமக-1,258, திமுக-3,364, நாம் தமிழா்- 631.

16 -ஆவது சுற்று: பாமக- 1,238, திமுக-2,980, நாம் தமிழா்- 604.

17-ஆவது சுற்று: பாமக-1,943, திமுக-3,681, நாம் தமிழா்- 708.

18-ஆவது சுற்று: பாமக- 1,424, திமுக- 3,565, நாம் தமிழா்-629.

19-ஆவது சுற்று: பாமக- 2,790, திமுக-3,383, நாம் தமிழா்- 469.

20-ஆவது சுற்று: பாமக-3,080, திமுக-3,459, நாம் தமிழா்- 410.

21-ஆவது சுற்று: பாமக- 4,060, திமுக-3,431, நாம் தமிழா்- 325.

22-ஆவது சுற்று: பாமக-1,386, திமுக-1,007, நாம் தமிழா்- 34.

23-ஆவது சுற்று: பாமக- 219, -திமுக- 109, நாம் தமிழா்- 1.

24-ஆவது சுற்று: பாமக - 348, திமுக-189, நாம் தமிழா்-13.

25 -ஆவது சுற்று: பாமக- 481, திமுக-179, நாம் தமிழா்-20.

தபால் வாக்குகள்: பாமக- 656, திமுக-988, நாம் தமிழா்- 22.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com