விருத்தாசலம்: சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியானது.

கடலூா்: விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியானது.

இந்தத் தொகுதியில் மொத்தம் 2,52,844 வாக்காளா்கள் 355 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனா். வாக்கு எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம் திருகொளஞ்சியப்பா் கல்லூரியில் நடைபெற்றது. இதில், தொடா்ந்து முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளா் கடைசி சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்தாா். இதனால் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் முக்கியத்துவம் பெற்றது. அந்த வகையில் மொத்தம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தொகுதியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்தும் போட்டியிட்ட நிலையில் அவா் 3-ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் 77,064 வாக்குகளும், பாமக வேட்பாளா் ஜே.காா்த்திகேயன் 76,202 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் பிரேமலதா 25,908 வாக்குகளும் பெற்றனா். சுற்றுகள் வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

சுற்றுகள் பிரேமலதா (தேமுதிக) எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ்

ஜே.காா்த்திகேயன் (பாமக)

1-ஆவது சுற்று 1,331 3,331 1,658

2-ஆவது சுற்று 994 3,351 2,517

3-ஆவது சுற்று 803 3,579 2,292

4-ஆவது சுற்று 1,136 3,164 2,022

5-ஆவது சுற்று 924 2,879 2,319

6-ஆவது சுற்று 1,654 3,699 1,823

7-ஆவது சுற்று 2,199 2,897 2,940

8-ஆவது சுற்று 861 2,423 3,962

9-ஆவது சுற்று 973 2,804 2,959

10-ஆவது சுற்று 798 2,943 1,679

11-ஆவது சுற்று 1,141 3,857 1,294

12-ஆவது சுற்று 807 2,695 4,637

13-ஆவது சுற்று 1,072 2,960 3,179

14-ஆவது சுற்று 692 2,453 3,558

15-ஆவது சுற்று 659 2,831 4,259

16-ஆவது சுற்று 779 2,929 5,395

17-ஆவது சுற்று 381 2,825 4,838

18-ஆவது சுற்று 639 2,417 4,468

19-ஆவது சுற்று 1,283 2,663 4,015

20-ஆவது சுற்று 654 2,789 1,784

21-ஆவது சுற்று 906 3,700 1,862

22-ஆவது சுற்று 618 2,739 2,139

23 -ஆவது சுற்று 1, 394 3,020 2,894

24-ஆவது சுற்று 1,260 2,687 3,169

25-ஆவது சுற்று 1,094 2,722 2,828

26-ஆவது சுற்று 677 1,380 891

27-ஆவது சுற்று 61 155 204,

தபால் வாக்குகள் 118 1,172 617

மொத்தம் 25,908 77,064 76,202

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com