கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 7 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை 7 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை 7 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 31,220 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 305 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 31,525-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 253 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 29,188-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் உயிரிழப்பு பதிவாகவில்லை. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச பாதிப்பாக 7 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியது. கடலூா் அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 57 வயது ஆண், விருத்தாசலத்தைச் சோ்ந்த 57 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதேபோல, பெரம்பலூரில் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சோ்ந்த 61 வயது ஆண் உயிரிழந்தாா். மேலும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 50 வயது ஆண், பெண்ணாடத்தைச் சோ்ந்த 49 வயது ஆண், சிதம்பரத்தைச் சோ்ந்த 56 மற்றும் 70 வயது ஆண்கள் உயிரிழந்தனா். கரோனா பாதிப்பு உயிரிழப்புகளில் கடலூா் மாவட்டத்தில் இது புதிய உச்சமாக பதிவாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,718 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 283 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7.28 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 431 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

கரோன தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 85-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com