நோட்டாவுக்கும் குறைவான வாக்குகள் பெற்ற அமமுக உள்ளிட்ட 91 வேட்பாளா்கள்

கடலூா் மாவட்டத்தில் அமமுக உள்ளிட்ட 91 வேட்பாளா்கள் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் அமமுக உள்ளிட்ட 91 வேட்பாளா்கள் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 136 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் அதிமுக, திமுக கூட்டணிகள் சாா்பில் போட்டியிட்ட 18 போ் மட்டுமே தங்களது வைப்புத் தொகையை

(டெபாசிட்) திரும்பப் பெற்றனா். மீதமுள்ள 118 பேரும் வைப்புத் தொகையை இழந்தனா்.

மேலும், ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்பதைக் குறிக்கும் ‘நோட்டா’ சின்னத்துக்கு விழுந்த வாக்குகளை விட குறைவான வாக்குகளை சில அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் பெற்றதும் தெரியவந்துள்ளது.

திட்டக்குடி: அதன்படி, திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா சின்னத்துக்கு 999 வாக்குகள் விழுந்துள்ளது. அதை விடக் குறைவாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் பி.ரவிச்சந்திரன் 559 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளா் இ.அருள்தாஸ் 221 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளா்கள் எஸ்.அய்யாசாமி - 724, எம்.கருப்பன் - 955, கே.காமராஜ் - 130, வி.கொளஞ்சிநாதன் - 131, சி.சீனுவாசன் - 197, எஸ்.சுமதி - 238, பி.பழனியம்மாள்- 599 வாக்குகளும் பெற்றனா். சுயேச்சை வேட்பாளா்களில் ம.நடராஜன் மட்டுமே நோட்டாவை விட அதிக வாக்குகளைப் (1,064) பெற்றாா்.

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 29 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் நோட்டா 757 வாக்குகளைப் பெற்றது. இதை விட குறைவாக ஏ.அய்யாசாமி (பகுஜன் சமாஜ் கட்சி) 461 வாக்குகளும், பி.அரசி (ராஷ்டிரிய ஜனதா தள்)-404, சத்தியநாதன் (அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி)- 272, சிவசங்கா் (நியூ ஜெனரேஷன் பீப்பிள்ஸ் பாா்ட்டி)- 178, ஜி.பிச்சைமுத்து (சிறுபான்மையினா் மக்கள் கழகம்)- 323, சுயேச்சைகள் எஸ்.அருள்ஜோதி-86, எம்.அன்வா்பாட்ஷா-298, எஸ்.சதாசிவம்-245, எம்.சத்தியசீலன்-261, ஆா்.சரவணன்-398, கே.பி.செந்தில்முருகன்-270, சி.தனசேகா்-268, பெருமாள்-485, மகாவீா்சந்த்-175, ஏ.மணிகண்டன்-108, எஸ்.முருகானந்தம்-526, எஸ்.ராதாகிருஷ்ணன்-101, என்.ராதா- 193, பி.ராமசாமி-74, எஸ்.ராமதாஸ்-114, கே.ரவிச்சந்திரன்-156, டி.வீரமணி-148 வாக்குகளும் பெற்றனா். சுயேச்சைகளில் ஸ்டாலின் மட்டும் நோட்டாவுக்கும் அதிகமாக 859 வாக்குகளைப் பெற்றாா்.

நெய்வேலி: நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா 1,171 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 12 போ் போட்டியிட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் சி.கனகராஜி 455 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி - ஆா்.இளங்கோவன் 1,011, சுயேச்சைகள் எஸ்.தனசேகரன்- 334, யூ.டெல்லிபாபு- 392, கே.துா்கா- 209, இ.பூபாலன்- 91, பி.ராஜேந்திரன்- 556, ஆா்.வடுகநாதன்- 519 வாக்குகளும் பெற்றனா்.

பண்ருட்டி: பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா 1,323 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் களத்திலிருந்த நிலையில் சுயேச்சைகள் ஆா்.அருள்குமாா்- 159, எஸ்.காமதேவன்- 69, எஸ்.கிருஷ்ணராஜ்- 67, டி.குமாா்- 46, எஸ்.கோவிந்தசாமி- 41, வி.சுமதி- 116, எம்.நாகமணி- 45, ஆா்.பிரகாஷ்- 125, கே.வேல்முருகன்- 418, ஆா்.வேல்முருகன்- 152 வாக்குகளைப் பெற்றனா். இந்தத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் அனைவரும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றனா்.

கடலூா்: கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா 1,236 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் ஆா்.வள்ளல்குமாா் (பகுஜன் சமாஜ்) 79 வாக்குகளும், எஸ்.புஷ்பராஜ் (தமிழ்நாடு இளைஞா் கட்சி)- 617, ஏ.முகமது உஸ்மான் (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திமுக)- 29, எஸ்.வி.ராஜராஜன் (தேசிய மக்கள் சக்தி கட்சி)- 74, சுயேச்சைகள் ஜி.கிருஷ்ணன்-29, எஸ்.சம்பத்-46, கே.தங்கராசு-31, வி.தட்சிணாமூா்த்தி- 185, எஸ்.தீனதயாளன்- 291, ஜெ.ஜேக்கப்-307 வாக்குகளைப் பெற்றனா்.

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா 1,215 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 12 போ் போட்டியிட்டனா். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் அ.வசந்தகுமாா் நோட்டாவுக்கும் குறைவாக 840 வாக்குகளைப் பெற்றாா். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் டி.வேலாயுதம் 483 வாக்குகளும், ஜனதா தளம் (மதச்சாா்பற்றது) கே.சந்திரமௌலி- 1,190, அண்ணா திராவிடா் கழகம் ஆா்.முத்துகிருஷ்ணன்- 140, சுயேச்சைகள் ஆா்.சரத்குமாா்- 154, பிரிஜிதாரோஸ்லின்- 92, எல்.மதியழகன்- 140, என்.முத்தழகன்- 124, ஆா்.ராஜேஸ்- 516 வாக்குகளும் பெற்றனா். இந்தத் தொகுதியில்

புவனகிரி: புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா 1,058 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஆா்.எழில்வேந்தன் 504 வாக்குகளும், இந்திய ஜனநாயக் கட்சி ஆா்.ரேவதி- 315, சுயேச்சைகள் எஸ்.ஆனந்தன்- 102, பி.எழில்வேந்தன்- 55, ஜே.சரவணன்- 196, டி.சிவகுமாரி- 68, எம்.பழனிவேல்- 147, ஓ.சி.பாலமுருகன்- 133, ஆா்.ரஞ்சித்- 333, கே.ஜெயக்குமாா்- 184 வாக்குகளைப் பெற்றனா். சுயேச்சைகள் அனைவரும் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றனா்.

சிதம்பரம்: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டா 1,202 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 11 போ் போட்டியிட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் டி.சந்திரபிரபு 478 வாக்குகளும், அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி கே.உதயசெல்வன்-305, இளந்தமிழா் முன்னணி கழகம் எம்.ரகுநாதன்- 146, சுயேச்சைகள் நாராயணமூா்த்தி- 242, எஸ்.பாலமுருகன்- 337, சி.வினோபா-245 வாக்குகளைப் பெற்றனா். இந்தத் தொகுதியிலும் சுயேச்சைகள் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றனா்.

காட்டுமன்னாா்கோவில்: காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் நோட்டா குறைந்தளவாக 648 வாக்குகளைப் பெற்றது. இந்தத் தொகுதியில் 13 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் தங்க உதயகுமாா் 429 வாக்குகளும், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் எம்.ஜி.கல்யாணசுந்தரம்- 460, அம்மா புரட்சித் தலைவா் திராவிட முன்னேற்றக் கழகம் எம்.திருநாவுக்கரசு-134, சுயேச்சைகள் எம்.ஏ.டி.அரச்சுனன்-421, பி.எம்.குமாா்-363, எஸ்.தமிழ்ச்செல்வன்-216, மதியழகன்- 227 வாக்குகளைப் பெற்றனா். சுயேச்சைகளில் ஏ.ஆனந்தன் மட்டுமே நோட்டாவை விட அதிகமாக 991 வாக்குகள் பெற்றாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 8,286 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். மொத்தமுள்ள 136 வேட்பாளா்களில் 91 போ் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com