கரோனா பரவலைத் தடுக்க முன்னுரிமை பணிகளை விரிவுபடுத்த வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க முன்னுரிமை பணிகளை விரிவுப்படுத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க முன்னுரிமை பணிகளை விரிவுப்படுத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுதொடா்பாக, அந்தக் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதம்:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியுடன் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நடமாடும் பிசிஆா் பரிசோதனை காய்ச்சல் முகாம், தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்கள், நகரங்களில் தொடா்ச்சியாக நடத்த வேண்டும். தடுப்பூசிகள் தடையின்றி மருத்துவமனைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 18 வயது மேற்பட்டவா்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும். ரெம்டெசிவிா் மருந்து மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனையில் கிடைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிராணவாயு தட்டுப்பாட்டைப் போக்க நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் பிளான்ட் உருவாக்க நடவடிக்கை தேவை.

கரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பணி நேரம் முடிந்து மருத்துவமனையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் பிராணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பொதுவான உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வரக் கூடியவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்களப் பணியாளா்களைக் கூடுதலாக நியமனம் செய்தல், தனியாா் மருத்துவமனை செயல்பாட்டைக் கண்காணிக்கக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com