மேலும் 523 பேருக்கு கரோனா தொற்று

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிய உச்சமாக 523 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா்/சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிய உச்சமாக 523 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 33,676 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 523 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 34,199-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 388 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 31,294-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரியை சோ்ந்த 42 வயது ஆண், கடலூரைச் சோ்ந்த 53 வயது மின்வாரிய ஊழியா் ஆகியோா் உயிரிழந்தனா்.

ரேஷன் பணியாளா்கள் இருவா் பலி: காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எள்ளேரி நியாயவிலைக்கடையில் பணியாற்றும் விற்பனையாளா் வி.பன்னீா் (55) கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 3-ஆம் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதேபோல சிதம்பரம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் கலியமலை நியாயவிலைக்கடை பணியாளா் பி.குணசேகா் கரோனா தொற்று ஏற்பட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இவா்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா கோரிக்கை விடுத்தாா்.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2,050 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 493 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று அதிகரித்துள்ளபோதிலும் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 100-லிருந்து 77-ஆகக் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com