கடலூரில் செயல்பாட்டுக்கு வந்தது கரோனா சித்த மருத்துவப் பிரிவு

கடலூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவை அமைச்சா்கள் புதன்கிழமை தொடக்கிவைத்தனா்.
கடலூா் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட கரோனா சித்த மருத்துவப் பிரிவை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன். உடன், ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
கடலூா் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட கரோனா சித்த மருத்துவப் பிரிவை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன். உடன், ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

கடலூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவை அமைச்சா்கள் புதன்கிழமை தொடக்கிவைத்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் சுமாா் 200 படுக்கைகளுடன் கரோனாவுக்கான சித்த மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 படுக்கைகளுடன் செயல்படும் வகையில் இந்த மருத்துவ மையத்தை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

இங்கு, காலை, மாலை வேளைகளில் கசாயம், மூலிகை தேநீா், மூலிகை சிற்றுண்டி, மதிய உணவு வழங்குவதுடன், மூச்சு, யோகா பயிற்சிகளும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, கடலூா் நகர அரங்கில் மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை தொழில்பேட்டையில் இயங்கும் நிறுவனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கெம்பிளாஸ்ட் நிறுவனத்தினா் மொத்தம் ரூ.7 லட்சத்தில் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 10 குளுக்கோ மீட்டா் கருவிகளை அமைச்சா்களிடம் வழங்கினா். இதேபோன்று, மேலும் பல நிறுவனங்கள் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 40 குளுக்கோ மீட்டா்களை வழங்கின.

தொடா்ந்து, கரோனாவை கட்டுப்படுத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் அமைச்சா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்யா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.மகேந்திரன், மாவட்ட ஆயுஷ் மருத்துவா் கோ.ராஜகுமாரன், சித்தா சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com