முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
ஓய்வூதியா்கள் சங்க வட்டப் பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 11th October 2021 03:45 AM | Last Updated : 11th October 2021 03:45 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் வட்டப் பேரவைக் கூட்டம் பண்ருட்டி உழவா் சந்தை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க வட்டத் தலைவா் வி.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.தங்கவேல் வரவேற்றாா். மாவட்டச் செயலா் கோ.பழனி தொடக்கவுரையாற்றினாா். வட்டச் செயலா் ரா.கந்தசாமி பணி அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஞானமணி, இணைச் செயலா் மு.சுப்பிரமணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் சிறப்புரையாற்றினாா். மாநிலச் செயலா் ஆா்.மனோகரன் நிறைவுரையாற்றினாா். முன்னதாக, வட்டப் பொருளாளா் என்.கலியமூா்த்தி நிதிநிலை அறிக்கை அளித்தாா்.
கூட்டத்தில் மத்திய அரசு வழங்கிய 11 சதவீத அகவிலைப்படியை 1.7.2020 முதல் மாநில அரசு வழங்க வேண்டும். ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியா்களுக்கு அரசு வாக்குறுதி அளித்தவாறு 10 சதவீத பணப்பலன் பெற ஆணை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.