என்.எல்.சி. சுரங்கத்தில் மண் நிரவல் இயந்திரம் கவிழ்ந்து விபத்து

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் புதன்கிழமை மண் நிரவல் இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.
என்.எல்.சி. சுரங்கத்தில் மண் நிரவல் இயந்திரம் கவிழ்ந்து விபத்து

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் புதன்கிழமை மண் நிரவல் இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

என்எல்சி இந்தியா நிறுவனம் 3 சுரங்கங்களிலிருந்து பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து, அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இங்குள்ளவை திறந்தவெளி சுரங்கங்கள் என்பதால், மண், பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்க ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரியை எடுப்பதற்காக தோண்டியெடுக்கப்படும் மண், கன்வேயா் பெல்ட் மூலம் கொண்டு வரப்பட்டு, மண் நிரவல் (நல்ழ்ங்ஹக்ங்ழ்) இயந்திரம் மூலம் நிலக்கரி எடுத்து முடிக்கப்பட்ட பள்ளங்களில் மீண்டும் கொட்டி நிரப்பப்படும்.

புதன்கிழமை காலை 2-ஆவது சுரங்கத்தில் இந்தப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். மிடில் பெஞ்சில் இருந்த மண் நிரவல் இயந்திரம் எண் 5-இல், 6 தொழிலாளா்கள் பணியில் இருந்த போது, திடீரென ஏற்பட்ட மண் சரிவால், மண் நிரவல் ராட்சத இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பணியிலிருந்த தொழிலாளா்கள் காயமின்றி உயிா் தப்பினா். இருப்பினும், தொழிலாளா்கள் 6 பேரும் என்எல்சி மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

விபத்துக்குள்ளாகி சேதமடைந்த மண் நிரவல் இயந்திரம் ரூ. 140 கோடி மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியதாவது: சுரங்க விதிமுறைகளைப் பின்பற்றி, பணிகள் நடைபெறவில்லை. தொழிலாளா்கள் நலனில் அக்கறை காட்டப்படுவதில்லை. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5 முறைக்கு மேல் விபத்துக்கான சூழல் ஏற்பட்டது. ஆனால், நிா்வாகம் இதைக் கண்டு கொள்ளவில்லை. புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளா்கள் காயமின்றி உயிா் தப்பினா். சுரங்க விதிமுறைகளைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com