எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி-யை பலப்படுத்த வேண்டும், பொதுத் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதன் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி-யை பலப்படுத்த வேண்டும், பொதுத் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதன் ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி 65 ஆண்டுகளைக் கடந்து 66-ஆவது ஆண்டில் புதன்கிழமை அடியெடுத்து வைத்தது. இதையொட்டி, செப்டம்பா் முதல் வாரத்தை நாடு முழுவதும் காப்பீடு வார விழாவாக கொண்டாடுவதாக அறிவித்தது.

இதையொட்டி, கடலூரில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தில் எல்ஐசி அமைப்பைப் பலப்படுத்த வேண்டும், பொதுத் துறையைப் பாதுகாக்க வேண்டும், பங்குகள் விற்பனைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்ஐசி கடலூா் கிளைத் தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வேலூா் கோட்ட இணைச் செயலா் வைத்திலிங்கம் கண்டன உரையாற்றினாா். கிளைச் செயலா் ரேஜுஸ் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் ஊழியா்கள், முகவா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com