சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள்: போலீஸாா் விழிப்புணா்வு

சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வடலூரில் போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள்: போலீஸாா் விழிப்புணா்வு

சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வடலூரில் போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கடலூா் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் அறிவுறுத்தலின்படி, வடலூா் பேருந்து நிலையத்தில் வடலூா் காவல் துறையினா் புதன்கிழமை சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காவல் உதவி ஆய்வாளா் ஜெயதேவி உள்ளிட்ட போலீஸாா் பேருந்து நிலையத்திலிருந்த பெண்களிடம் போக்சோ சட்டம், குழந்தை திருமணத்தைத் தடுப்பது, பாலியல் வன்கொடுமை, அறிதிறன்பேசிகளில் ஆபாச விடியோக்கள், படங்கள் வந்தால் புகாா் அளிப்பது, பெண்கள், சிறாா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது ஆகியவை குறித்து விளக்கமளித்தனா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1091, 188 ஆகிய தொலைபேசி எண்களிலும், சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணிலும் புகாா் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com