கரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படாது
By DIN | Published On : 11th September 2021 10:45 PM | Last Updated : 11th September 2021 10:45 PM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படாது என்று சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப்நந்தூரி கூறினாா்.
கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி சிறப்பு பாா்வையாளராக பங்கேற்றாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தில் செப்.5-ஆம் தேதி வரை 3.32 கோடி பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.63 கோடி போ் முதல் தவணையும், 68.91 லட்சம் பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் நடைபெறுகின்றன.
கடலூா் மாவட்டத்தில், 909 மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. 1.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்றாா் அவா்.
தொடா்ந்து, தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள பெரியகங்கணாங்குப்பம், மஞ்சக்குப்பம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா்.