அண்ணா பிறந்த நாள்: தலைவா்கள் மரியாதை

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய
கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

கடலூா்/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி/திருவண்ணாமலை: அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அவரது உருவச் சிலைக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு கடலூா் மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக சாா்பில்: திமுக சாா்பில், அந்தக் கட்சியின் தோ்தல் பணிக் குழுச் செயலா் இள.புகழேந்தி தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் நகராட்சித் தலைவா்கள் து.தங்கராசு, ஜி.ராஜேந்திரன், மாணவரணி அமைப்பாளா் ஆா்.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், கடலூா் நாடாளுமன்ற தொகுதி செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையிலும், மதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் என்.ராமலிங்கம் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

குறிஞ்சிப்பாடி: திராவிடா் கழகம் சாா்பில் குறிஞ்சிப்பாடியில் உள்ள அண்ணா சிலைக்கு அதன் பொது செயலா் துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சிதம்பரம்: சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில், அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com