முதலை கடித்து மரணமடைந்ததிமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிவாரணம்
By DIN | Published On : 16th September 2021 01:22 AM | Last Updated : 16th September 2021 01:22 AM | அ+அ அ- |

சிதம்பரம்: முதலை கடித்து இழுத்துச் சென்றதில் மரணமடைந்த திமுக நிா்வாகி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே வேளக்குடி பழையநல்லூா் கிராமப் பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை இரவு குளிக்கச் சென்ற திமுக கிளைச் செயலா் கோபாலகிருஷ்ணனை (65), முதலை கடித்து இழுத்துச் சென்றது. இதில், அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.
இந்த நிலையில், அவரது குடும்பத்தாரை கடலூா் மாவட்ட வன அலுவலா் செல்வம், வனப் பணியாளா்கள் சந்தித்து உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினா்.
சிதம்பரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா், வனவா் அஜிதா, வனக் காப்பாளா் அனுசுயா, சரளா, அமுதப்பிரியன், வனப் பணியாளா்கள் ஸ்டாலின், புஷ்பராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.