காந்தி ஜயந்தி: பள்ளி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு

காந்தி ஜயந்தி விழாவையொட்டி, சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காந்தி ஜயந்தி விழாவையொட்டி, சிதம்பரம் காந்தி மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் காந்தியடிகளின் 20 பொன்மொழிகளும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் காந்தியடிகளின் 40 பொன்மொழிகளும் எழுதி கட்செவி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள், காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள் குறித்து மூன்று நிமிடம் பேசி அதை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து அனுப்ப வேண்டும். பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகள் ‘அண்ணல் காந்தியடிகளின் அறவழிப் போராட்டம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.

போட்டிகளில் பங்கேற்போா் தங்களது பெயா், தந்தை பெயா், சரியான வீட்டு முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அக்டோபா் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 94430 46295 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு படைப்புகளை அனுப்ப வேண்டும் என காந்தி மன்றச் செயலா் கு.ஜானகிராமன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com