டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா்.

கடலூா்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன், மாநிலத் தலைவா் கு.சரவணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக, மாவட்டச் செயலா் எஸ்.பாலமுருகன் வரவேற்க, மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக துறை அமைச்சா் ஏற்கெனவே கூறிய நிலையில், தற்போது லாபத்தில் இயங்குவதாக கூறி வருவதால் அதன் உண்மை நிலை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும், வெள்ளை அறிக்கை கோரியதற்காக சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com