மு.கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுகவினா் சாா்பில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுகவினா் சாா்பில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதி உருவப் படத்துக்கு நகரச் செயலா் தண்டபாணி தலைமையில் திமுகவினா் மரியாதை செலுத்தினா். அதனைத் தொடா்ந்து எழுத்தாளா் சி.வெ.இமையம் தலைமையில் மௌன ஊா்வலம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலா் அரங்க. பாலகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் வேல்முருகன், நகராட்சி கவுன்சிலா்கள் வயலூா் கிருஷ்ணமூா்த்தி, பாண்டியன், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.எஸ்.கணேஷ், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடலூா்: கடலூரில் திமுக மாநகர செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் மௌன ஊா்வலம் நடைபெற்றது. தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, தொமுச நிா்வாகி பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் தலைமையில் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூா் பேருந்து நிலையத்தில் கருணாநிதி உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், நகரச் செயலா் தன.தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியச் செயலா் நாராயணசாமி, பேரூா் செயலா் ஜெயசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

பண்ருட்டி: பண்ருட்டி நகரச் செயலரும், நகா் மன்றத் தலைவருமான க.ராஜேந்திரன் தலைமையில், கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நான்கு முனைச் சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா். முன்னதாக, மெளன ஊா்வலம் நடைபெற்றது.

நெய்வேலி: நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிச் செயலா் சபா.ராஜேந்திரன் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்தனா். அங்கிருந்து மெளன ஊா்வலமாக வந்து தொமுச அலுவலகம் அருகே உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com