போதைப் பொருள் விற்பனை: புகாா் எண் வெளியீடு

கடலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண் வெளியிடப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க கைப்பேசி எண் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் உள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள காவல் துறை ஆய்வாளா்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளித்திட கைப்பேசி எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ளாா். அதன்படி, 74188 46100 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். இந்த எண்ணில் புகைப்படம், விடியோ போன்றவற்றையும் வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பலாம். புகாா் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com