ஊராட்சி மன்ற கட்டட விவகாரம்:கிராம மக்கள் சாலை மறியல்

கோரணப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணி நடைபெறுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோ.அப்பியம்பேட்டை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோரணப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணி நடைபெறுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோ.அப்பியம்பேட்டை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உள்பட்டது கோ.அப்பியம்பேட்டை ஊராட்சி. இங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதமடைந்ததால் கடந்த 2017-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அப்போது அதே இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டதாம்.

இந்த நிலையில், தற்போது கோரணப்பட்டு வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோ.அப்பியம்பேட்டை கிராம மக்கள் குள்ளஞ்சாவடி - காட்டுக்கூடலூா் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சே.சுரேஷ்குமாா், பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com